நேற்று கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரகும்புர பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கிரிந்திவெல பொலிஸ்பிரிவு, பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை அணைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தீக்கிரையான உடைமைகளின் பெறுமதியும் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளார்.அதுவேளை தீ பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கும் கிரிந்திவெல பொலிஸ்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.