இலங்கை அணி 2 – 1 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
255 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 24.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக தகுத்ஸ்வனாஷே கைதானோ 19 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் இலங்கை அணியின் ஜெப்ரி வான்டர்சே 10 ஓட்டங்களுக்க 4 விக்கெட்டுக்களையும் துஷ்மந்த சமீர 20 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.