ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக பெத்தும் நிஸங்க 55 ஓட்டங்களையும், சரித் அசலங்க 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் சிம்பாப்வே அணியின் ரிச்சர்ட் கரவா 46 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், சிம்பாப்வே அணி 255 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.