ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி,கோட்டாபய ராஜபக்சவின் அடுத்த மூன்று ஆண்டுகளை கடவுளிடம் பாரப்படுத்தி விட்டே, பி.பீ ஜயசுந்தர சென்றுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த இரண்டு வருடங்களில் தாம் தோல்வியடைந்து விட்டதாக கூறும் ஜனாதிபதி, அடுத்து மூன்று ஆண்டுகளுக்காக நுால் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையிலேயே பி.பீ ஜயசுந்தரவின் கருத்து வெளியாகியுள்ளதாக விஜயசிறி தெரிவித்தார். இதேவேளை, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார திட்டங்களுக்கு உதவுவதாக சமிந்த விஜயசிறி கூறியபோது, அரசாங்கத்தரப்பினர், சஜித் பிரேமதாசவுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதாக கூறினர்.எனினும் அந்த தடுப்பூசி மெதமுலன்னையில் இருந்து எடுத்து வந்து செலுத்தப்படவில்லை என்றும் மேலும் சமிந்த விஜயசிறி குறிப்பிட்டார்.