அடுத்து வரும் சில மாதங்களுக்குள் அமெரிக்க டொலர் கடனைப் பெற இலங்கை தவறினால், சுமார் 04 மணித்தியாலங்கள் தினசரி மின்வெட்டு நீடிக்கும் வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தில் தேவையான தியாகங்களை செய்வதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும், அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக தியாகங்களைச் செய்து வழிவகுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் அமைச்சர் குறிப்பிட்டார்.