குருணாகல், வெலகெதர – கோனதெனிய பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டுள்ள பெண் 46 வயதான ஒருவரென்றும் மற்றைய நபர் 41 வயதான ஒருவரென்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி பெண்ணைக் கொலை செய்ததன் பின்னர், அவரது கணவரும் வீட்டிற்கு அருகில் உள்ள பாழடைந்த வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.