இன்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்திற்கான மேலதிக தினம் ஒன்றினை பெற்றுக்கொள்ளுமாறு” ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய, சபாநாயகருக்கு அறிவித்து நாளை மற்றும் நாளை மறுதினங்களுக்கு மேலதிகமாக எதிர்வரும் 21ஆம் திகதியும் ஒத்திவைப்பு விவாதத்திற்கான தினத்தை பெற்றுக்கொள்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.