இன்று மதியம் சுமார் 12 மணியளவில் யாழ்.கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவின் கரணவாய் பகுதியில் நேற்று ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.கரணவாய் பகுதியின் சில பிரிவுகளிலேயே இந்த சேத விவரங்கள் பதிவாகியுள்ளதை அவதானிக்க முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.