நாட்டில் இயங்கும் சில உணவகங்கள் மற்றும் விடுதிகள், ‘வெளிநாட்டவர்களுக்கு மட்டும்’ என்ற கொள்கையைப் பின்பற்றி இலங்கையர்களைப் புறக்கணித்த சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரித்துள்ளது.
இதுதொடர்பான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்ட சமயத்தில், அதிலிருந்து மீள்வதற்கு உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தனர்.இதேபோன்று நாட்டின் அரசியல் யாப்பின்படி நாட்டின் சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.