மேல் மாகாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது செயற்படும் நபர்களை கண்காணிக்கும் நடவடிக்கை பொலிஸாரினால் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, நேற்றைய தினம் 3,257 உந்துருளிகளும், 2,396 முச்சக்கரவண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, 7,375 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில், உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 1,404 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.