ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியின் விலையை 105 ரூபாவுக்கு குறைவாகவும், சுப்பிரி சம்பா ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கு குறைவாகவும் இந்த ஆண்டு இறுதி வரையில் பராமரிக்கும் பொறுப்பை லங்கா சதொச மேற்கொள்ளும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று அம்பலாங்கொடையில் உரையாற்றிய அமைச்சர் குணவர்தன, ஒரு கிலோகிராம் பச்சைப் பயறு 225 ரூபாவுக்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் பச்சைப்பயறை 450 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக அமைச்சர் கூறினார்.
பச்சைப்பயறு 225 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்குமெனவும் குறிப்பிட்டார்.