சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது முத்துராஜவெல – மாபிம லிட்ரோ நிறுவனத்திற்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் , லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக ரேனுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அறிவிக்கப்படுகின்றது.