Date:

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு: பிரதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் நேற்று முன்தினம் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த கொழும்பு குற்றவியல் தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த குண்டு 13 வயது சிறுவன் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

பின்னர் குறித்த சிறுவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அவரிடம் நீதவான் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய குறித்த கைக்குண்டு நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது.

வெப்பம் அடையும் பட்சத்தில் வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...