தூர சேவை தொடருந்துகளை உரிய வகையில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமையினால், இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கான முன்கூட்டிய ஆசன பதிவுகள் இடம்பெறமாட்டாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளாந்தம் சேவையில் ஈடுபடும் தொடருந்துகளுக்கான ஆசன பதிவுகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.