கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் 510 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது.
அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் 300 மில்லியன் டொலர் கடன் தொகையும் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.







