தடையின்றி மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறை சார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மின்சார துண்டிப்பு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (10) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி குறித்த பணிப்புரையை விடுத்ததாக அதில் கலந்து கொண்டிருந்த மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.