ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில், விற்பனை முகவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன்பாக அறிவிப்பு பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
”ஒருவருக்கு ஒரு சிலிண்டர் மாத்திரம். எரிவாயு கொள்வனவு செய்ய மின்சாரம் அல்லது நீர் கட்டண பற்றுச்சீட்டு கொண்டு வர வேண்டும். (நவம்பர் மாத கட்டண பற்றுச்சீட்டு” என அந்த அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் பதிவை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே, இந்த அறிவிப்பு பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், வேறு பகுதிகளுக்கு சென்று எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்கின்றமையினால், குறித்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தவிர்க்கும் வகையிலேயே, ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.