நாடாளுமன்ற செயலாளர் நாயகம் நாடாளுமன்ற பொலிஸ் பிரிவுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்து நாடாளுமன்ற ஊழியர்களை சோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் வெளியில் கொண்டுச்செல்லப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைவாகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, நாடாளுமன்ற ஊழியர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும் போது இவ்வாறு சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.