இன்று காலை 8.30 மணியளவில்,சலங்கந்தை பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் தனியார் பஸ் ஒன்று வீதியைவிட்டு 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இயந்திரகோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.