கடந்த டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175. 4 மில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதோடு இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது.
நவம்பர் மாத இறுதியில், நாட்டின் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன் டொலராக ஆக காணப்பட்டது. இதன்படி, 206.8 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கமாக மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை வெளிநாட்டு ஒதுக்கம் 1,588.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கத்தின் கையிருப்பு 54 சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய தகவல்களின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.