இன்று காலை 8 மணிமுதல் 16 மணித்தியாலம் கொழும்பு, தெஹிவளை – கல்கிஸை, கோட்டே, கடுவலை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக
நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும்,இரத்மலானை பகுதியிலும் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.