இலங்கையிலுள்ள 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார்.
அரசாங்கம் உரிய அமைச்சர்களை நியமிக்க தவறியமையே அரசாங்கத்தின் தோல்விக்கு காரணம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து பின்னடைவுகளையும் குழுவாக நிவர்த்தி செய்வது கூட்டுப் பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.