Date:

சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பணம் செலுத்தப்பட்டது

தரமின்மை காரணமாக நிராகரிக்கப்பட்ட உரத்தை இலங்கைக்கு கொண்டுவந்த சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சேதன உரம், உரிய தரத்தில் இல்லாத நிலையில், அதனை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

இதனால் குறித்த உரம் கப்பலில் இருந்து இறக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

எவ்வாறாயினும் இதற்கான கட்டணத்தை இலங்கை வழங்க வேண்டும் என்று சீன உர நிறுவனம் வலியுறுத்தி வந்தது.

அதேநேரம் குறித்த நிறுவனத்துக்கு கட்டணத்தை செலுத்துவதற்காக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடை அண்மையில் நீக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த சீன உர நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 6.9 மில்லியன் டொலர்கள் பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...