இந்த அரசாங்கத்தின் முட்டாள்தனமான மற்றும் திமிர்பிடித்த கொள்கையினால் இன்று நாட்டு விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், விவசாயம் கிட்டத்தட்ட முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த அனர்த்தத்தில் இருந்து நாட்டையும் விவசாய மக்களையும் காப்பாற்ற ஐக்கிய மக்கள் சக்தி முன்வரும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தனது ஆட்சியில் விவசாயிகளுக்கு உரம் மற்றும் இதர தேவைகள் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கந்தளாய் பிரதேசத்தில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் விவசாய சமூகம் எதிர்நோக்கும் பல் வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக இதன் போது கலந்துரையாடினார்.