டொலர் பற்றாக்குறை காரணமாக தேசிய மிருகவள அபிவிருத்திச் சபையினால் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு அவசியமான 1,500 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சோளத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக குறித்த 1,500 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததாக அந்த சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் கமகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், டொலர் பற்றாக்குறை காரணமாக குறித்த சோளத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், சோள இறக்குமதி தாமதமடைந்துள்ளமை காரணமாக, அற்குப் பதிலாக பயிர்ச்செய்கையாளர்களிடமிருந்து சோளப் பயிரைக் கொள்வனவு செய்து கால்நடைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிருகவள அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமத் கமகே தெரிவித்துள்ளார்.