டெங்கு நோயால் கடந்த வருடம் 19,087 பேர் பாதிக்கப்பட்டிருந்தாகவும் 27 மரணங்களும் பதிவானதாகவும் அந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயால் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மட்டுமே 5,515 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, டெங்கு அச்சுறுத்தல் நிலவும் 15 மாவட்டங்களை மையப்படுத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும், 81 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் ஆரம்பமாகவுள்ள இந்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் கூறியுள்ளார்.