ட்ரின்கோ பெற்றோலியம் டே(ர்)மினல் லிமிடட் என்ற நிறுவனத்தை நிறுவி, திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்குள் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் எண்ணெய் களஞ்சியத்தை முகாமைப்படுத்துவதற்காக இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் வழுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.