Date:

ஆசிரியர்களுக்கு எதிர்பாராத விதமாக அதிகரித்தது மாதாந்த சம்பளம்

2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சம்பள அதிகரிப்பை பெற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்றிரவு (03) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2022 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த ஆண்டு முதல் அதிபர்கள் ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக மாதாந்தம் இந்த 5000 ரூபா நிவாரண உதவியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இந்த நிவாரண உதவித் திட்டமானது, ஜனவரி மாதம் முதல்  அமுலுக்குவரும் என பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...