Date:

இன்று பிரதமரை சந்திக்கும் GMOA சங்கம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று(04) இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர், பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் பிரதமருடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்போது, வைத்தியர்களின் இடமாற்றல் சபையின் அனுமதியின்றி விசேட வைத்தியர்களுக்கான நியமன பட்டியலைத் தயாரித்தல், வைத்திய இடமாற்றல் சபையின் அனுமதியின்றி தர வைத்தியர்களை இணைத்துக் கொள்ளல், 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்தர இடமாற்ற பட்டியலைத் தயாரிக்காமை உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள்குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.

இந்த கோரிக்கைளை முன்னிறுத்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

சுமார் நான்கு நாட்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறி அந்த போராட்டத்தைக் கைவிட்டிருந்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...