இன்று காலை பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விஷேட அறிக்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக சில பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் இவ்வாறான பொய் பிரசாரங்களை வன்மையாக நிராகரிப்பதாகவும் பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.