சொந்த தொழிலில் இப்போது சாதாரண மக்கள் கூட ஆர்வம் காட்டுகிறார்கள்.
அவர்களே அப்படி என்றால் நடிகைகள் சும்மாவா விடுவார்கள், பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சொந்த தொழிலில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் செய்யும் சொந்த தொழில் குறித்த விவரங்களை பார்ப்போம்.
நயன்தாரா
தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கெத்தாக வலம் வருகிறார். இவர் அண்மையில் தீ லிப் பாம் என்ற கம்பெனி ஒன்றை துவங்கியுள்ளார். வெறும் லிப் பாம் மட்டுமே இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இதுதவிர ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் இயக்கி வருகிறார்.
சமந்தா
Saaki என்ற பெயரில் ஆன் லைனில் ஜவுளி வியாபாரம் செய்கிறார், இதில் பெண்கள் உடைகள் மட்டும் விற்கப்படுகின்றன.
ஹன்சிகா
The Balloon Stylist, பலூன்களை வைத்து டிசைன் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமன்னா 2015ம் ஆண்டு ஒயிட் அண்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை டிசைன் செய்து விற்கும் தொழிலை தொடங்கினார்.
காஜல் அகர்வால்
மும்பையில் செயற்கை நகைகள் செய்யும் கம்பெனி வைத்துள்ளார்.