திருகோணமலையில் இருந்து சீதுவை நோக்கி கோதுமை மாவை ஏற்றிச் சென்ற ரயில், திருகோணமலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, கலாவெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
ரயில் கடவை ஒன்றில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக கல்நேவ – விஜிதபுர வீதியின் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ரயில் தண்டவாளம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.