எதிர்வரும் சில நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல் ஒன்று இன்று வெளியிடப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று(31) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனவரி முதலாம் திகதியான நாளைய தினம் சுகாதார வழிமுறைகளை மிகச்சறியாக பின்பற்றுமாறும் அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.