திருகோணமலை எண்ணெய் களஞ்சியம் தொடர்பில் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தத்தில் மறைக்கப்பட்ட மேலும் ஒரு ஒப்பந்தம் உள்ளதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாகவே ‘லங்கா’ என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மைமை நிர்வாகத்தை இந்தியாவிற்கு கையளிக்கும் நோக்கிலேயே ‘லங்கா’ என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரின்கோ பெற்றோலியம் டே(ர்)மினல் லிமிடட் (Trinco Petroleum Terminal Ltd) என்ற புதிய நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் தெரிவித்திருந்தார்.
எண்ணெய் களஞ்சியத்தை முகாமைப்படுத்துவதற்காக இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று எதிர்காலத்தில் இந்தியாவுடன் கைச்சாத்திடப்படும் என அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.