எதிர்வரும் 3 வாரங்களுக்குள் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.