Date:

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று

தேசிய கொள்கைக்கு அமைய, பேருந்துக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (29) அறிவிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களின் அடிப்படையில், பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில், போக்குவரத்து அமைச்சில் இது தொடர்பான பேச்சுவார்த்தை, இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், இதற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் இதன்போது கையளிக்கப்படவுள்ளன.

தற்போது 14 ரூபாவாகவுள்ள குறைந்தபட்ச பேருந்துக் கட்டணத்தை, 2 ரூபாவினாலும், ஏனைய கட்டணங்களை 10% என்ற அளவிலும்  அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்துக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பேருந்துக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதை விடவும், டீசல் மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

டீசல் மானியம் வழங்காவிட்டால்,  14 ரூபாவாக உள்ள ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் 20 ரூபா வரையில் அதிகரிக்கப்பட வேண்டும்.

அத்துடன், ஏனைய கட்டணங்கள், 20 சதவீதமளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் CIDயில் ஆஜராகின்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11)அன்று குற்றப் புலனாய்வுத்...

முகக் கவசங்களை அணியுங்கள்;பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய...

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373