நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தின் பங்களிப்பைப் பார்க்கும் போது, அரசாங்கம் மக்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. இந்த அரசாங்கம் எப்போதும் மக்கள் சார்பான ஆட்சியை பார்க்காமல் குடும்ப நல ஆட்சியையே பார்க்கிறது. உண்மையை பொய்யாக்கி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதே கொள்கையை பின்பற்றி அதிகாரம் தக்கவைக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.
இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது எண்ணெய் விலை பற்றி பேசினார்கள். உலக சந்தையில் கூடும் போது அதிகரிக்கவும், குறையும் போது ஏன் குறைக்க வேண்டும் என்று கேட்டதாக அப்போது கூறப்பட்டது. அப்படிச் சொன்னவர்கள் இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள்,எமது கடந்த அரசாங்கத்தின் எரிபொருள் விலை சூத்திரத்தை விமர்சித்தோம் ஆனால் இப்போது அது இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சூத்திரத்தின்படி சிறிது சிறிதாக உயரும்போதோ அல்லது குறையைம் போதோ எண்ணெய் விலையை உடனடியாகக் குறைத்து மக்களுக்கு பலனைக் கொடுத்து வந்தோம்.உண்மையில் அந்த விலைச் சூத்திரம் இன்று நடைமுறையில் இருந்திருந்தால்,உலகளவில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்து வரும் இவ்வேளையில் எண்ணெய் விலையைக் குறைக்க முடியும்.
இந்த அரசின் சுரண்டல் விலைச்சூத்திரத்தின்படி, உலக சந்தையில் அதிகரிக்க அதிகரிக்க, உலக சந்தையில் குறையும்போது அதிகரித்து வரும் வினோதமான சூத்திரத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது. ஆட்சிக்கு வந்து பதினைந்து மாதங்களாகியும் உலக சந்தையில் வரம்பற்ற விதமாக எண்ணெய் விலை குறைவதைப் பார்த்தோம்.ஆனால் அந்த பலனை இந்த அரசால் மக்களுக்கு வழங்க முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக உலக சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக டொலரை சேமிக்க டொலர் பாவனையை குறைக்க எண்ணெய் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்த அரசின் மோசமான நிதி நிர்வாகத்தால் மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியுள்ளது.
எண்ணெய் விலை உயர்வால், உப்பு குலுக்கல் முதல் சுடுகாடு வரை அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயரத் தொடங்கியுள்ளன என்பதை நாம் அறிவோம். மக்கள் நலன் சார்ந்து செயல்படாததால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாத அரசாக இந்த அரசாங்கம் மாறியுள்ளது.
கேஸ் சிலிண்டரின் விலை 84% உயர்த்தப்பட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியது.அது மட்டுமின்றி எரிவாயு வெடிப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதனால், அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. யாருடைய உத்தரவின் பேரில் கேஸ் தரத்தை மாற்ற வேண்டும் என்று இன்றும் அரசால் மக்களுக்கு காட்ட முடியவில்லை.மேலும், அரசாங்கம் உருவாக்கியுள்ள உரப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை விவசாயத்தைறையில் எந்தப் பரிமாணமும் இல்லை என்பதை விவசாய சமூகம் இன்று காண்கிறது.இலங்கைக்கு உரம் கொண்டு வரும்போது அதனை சரிபார்ப்பதற்கு முறையான நடைமுறை உள்ளது. அது நாட்டுக்கு ஏற்றதாக இருந்தால் மட்டுமே கொள்வணவு செய்ய வேண்டும். ஆனால் இதை தாண்டி அவர்களுக்கு உத்தரவிட்டது யார்? யாருக்குத் தேவை இருந்தது? இவ்வளவு கொடூரமான குற்றத்தை யார் செய்தார்கள் என்று மக்களுக்கு இன்னும் தெரியவில்லை.
ஒரு வருடம் கடந்து புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன.தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலையில் இருந்து அரசாங்கம் விலகிச் சென்றுள்ளது. மக்களுக்கு பொறுப்புக் கூற ஆள் இல்லாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. நாடு இவ்வாறானதொரு பொருளாதாரப் பாதாளத்தில் இருக்கும் போது, மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் போது, நிதியமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டமாக உலக நாடு முழுவதும் பயணிப்பதை நாம் கேட்கின்றோம். நாளுக்கு நாள் இந்த மூழ்கும் கப்பலில் இருந்து அரச அதிகாரிகள் குதிக்க ஆரம்பித்து விட்டனர்.அரசாங்கம், அரச அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.சில எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் அரச அதிகாரிகள் மீது குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். எனவே, இன்று நம் நாடு ஓர் அரசாக அல்ல ஊறுகாய் போல உள்ளது.
சிலர் இந்த அரசாங்கத்தைச் சுற்றி அமர்ந்து சில கயிறுகளைக் கொடுத்தனர். மிகவும் திமிர்பிடித்த பல முடிவுகளை எடுத்தது.காலை வெளியிடப்பட்ட வர்த்தமானி இரவில் தலைகீழாக மாறுகிறது. இப்படிப்பட்ட ஊறுகாய் அரசாங்கம் கடந்த ஆண்டு முழுவதும் நம் நாட்டில் இருந்தது.நாட்டுக்கு ஒன்று,அமைச்சரவைக்கு ஒன்று, சர்வதேசத்துக்கு ஒன்று,ஊடகங்களுக்கு ஒன்று என்று சொல்லப்படுகிறது.கடைசியில் சேற்றில் பட்டை போல் தலைவர்கள் அங்கும் இங்கும் நடமாடும் போது நாடு பெரும் அதல பாதாளத்தில் விழுந்துள்ளது என்பது இன்று மிகத் தெளிவாகத் தெரிகிறது.
2021 ஆம் ஆண்டு முழுவதும் அரசாங்க அமைப்பு மாற்றத்தின் முடிவுகளை மக்கள் அனுபவித்தார்கள்.இதன் விளைவாக நாட்டில் பல மாற்றங்களை நாம் கண்டுள்ளோம். சமையல் அறையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடிகுண்டு போல் வெடித்தது.தேசத்திற்கு சோறு போட்ட விளைநிலங்கள் பாழ்நிலமாக மாறுவதைப் பார்த்தோம். உரம் இன்றி விவசாயிகள் வீதிக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.இப்போது சில விவசாயிகள் பயிர் செய்கைகள விட்டு விலகி விட்டனர்.
அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள அமைப்பு மாற்றத்தினால் பல விடயங்களை நாம் பார்க்கின்றோம்.ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே நாடு, ஒரு சாப்பாடு, ஒரு சாப்பாடு,ஒரு வேளை என்று வந்து நிற்கிறது.கடந்த ஒரு வருடமாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்கள் எவ்வாறு குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள் மற்றும் முறைமை மாற்றத்தின் கீழ் புனிதர்களாக்கப்பட்டது என்பதை இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கிறது.சீனி வரி மோசடிக்காக பில்லியன் கணக்கில் இழப்பீடு கொடுக்க வேண்டிய ஆண்டு, எரிவாயு கப்பல்கள் தாமதக் கட்டணமாக பில்லியன்களை செலுத்த வேண்டிய ஆண்டு. ஒரு பில்லியனுக்கும் அதிகமான பொதுப் பணம் கண்ணுக்குத் தெரியாத மலக்கப்பலைக்கு கொடுக்க வேண்டிய ஆண்டு. இதற்கிடையில் பால் மா, எரிவாயு வரிசைகள், மண்ணெண்ணெய் வரிசைகள், சீமெந்து வரிசைகள் என்று தொடர்கின்றன.
சதொச அரிசி வரிசை, பெட்ரோல் வரிசைகள் ஆண்டு முழுவதும் காணப்படுகின்றன. இதுபோன்ற வரிசையில் மக்கள் ஒரு வருடம் அலைய வேண்டியிருந்தது.2022 ஆம் ஆண்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த வரிசைகள் அனைத்தும் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் கடவுச்சீட்டு வரிசைகள் நீடிக்கப்படலாம் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
2021 ஆம் ஆண்டை முடித்து 2022 ஆம் ஆண்டைத் தொடங்குவதற்கு நாங்கள் தயாராகும் நிலையில், “கிராமத்துடன் கலந்துரையாடலைக்கு” இதுவே சிறந்த நேரம் என்பதை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நினைவூட்டுகிறோம். கடந்த ஆண்டு அவர்கள் எப்படிச் செய்தார்கள் மற்றும் உரையாடலில் முடிவுகளை எப்படி அனுபவித்தார்கள் என்பதை நீங்கள் மக்களிடம் கேட்கலாம்.விவசாய சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினால்,அரசின் பங்கு குறித்து அவர்களின் கருத்துகளை கேட்க வாய்ப்பு ஏற்படும் என்று கூற நம்புகிறோம்.
பெரும்பான்மையான அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் வேலை செய்வதில் நடைமுறைச் செயற்பாடுகள் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரதானிகளிடம் தெரிவித்த அறிக்கையை இன்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த பதவிகளுக்கு அரசியல்வாதிகளை நியமித்தால் நல்லது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். அரசாங்கத்தின் தோல்வி என்று அதிகாரிகளை அனுப்பி அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தைப் பகிர்ந்துகொள்ள முயல்வதை இன்று நாம் பார்க்கின்றோம். தலைவலிக்கு தலையணை போல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் போன்ற பல்வேறு பாடங்களில் சிறப்புத் திறன் கொண்டவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அறிவியல் அடிப்படையில் தான் அனைத்தையும் செய்வோம் என்று தம்பட்டம் அடித்து ஆட்சிக்கு வந்தார்கள்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் தங்கள் தோல்விகளை மறைக்கத் தவறிவிட்டதாகக் கூறுகிறார்கள்.20 ஆவது திருத்தச் சட்டத்தில் எனது சொல்லை சுற்றறிக்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளிடம் கூறியதை நான் கூற விரும்புகின்றேன்.அரசியல்வாதிகளை நியமித்தால் நல்லது எனவும் கூறுகின்றனர். இன்று நாடு பற்றிய ஒரு கருத்து தெளிவாக வெளிப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
அடுத்த வாரத்திற்குள் பர்மாவில் இருந்து 150,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் கூறுகின்ற இன்னொரு செய்தியையும் பார்த்தோம்.ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.உண்மையில் இந்த நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இருந்ததில்லை.நாட்டில் போதுமான அரிசி இருந்தது.ஆனால், இந்த அரசின் இயலாமையாலும், உர மானியம் வழங்க முடியாததாலும், ‘இயற்கை உரம்’ என்ற நாடகம் நடத்தி, பத்து ஆண்டுகளில் செய்ய நினைத்ததை இரவோடு இரவாக பெற்றுத்தருவோம் என்ற முட்டாள்தனமான முடிவு இறக்குமதிக்கு வழிவகுத்துள்ளது.அரிசி வேண்டுமா என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது.இறக்குமதி செய்யப்படும் அரிசி இரசாயன உரங்களில் இருந்து தயாரிக்கப்படும் அரிசி என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறோம்.இந்த வருடம் முடிந்து இன்னொரு வருடத்திற்கு நாம் செல்லவிருக்கும் போது, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் கிராமத்துடன் உரையாடுவதற்கான சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பதை நினைவுபடுத்துவதுடன்,நாங்கள் எவ்வாறு செய்தோம், எவ்வாறு முடிவுகள் கிடைத்தது என்பதை மக்களிடம் கேடகுமாறு கூறுகிறோம் என்று தெரிவித்ததுடன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.