நிதியமைச்சர்கள் பொருளாதாரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
1970 ஆம் ஆண்டுகளின் பின்னர், பொருளாதாரம் பற்றி அறிந்தவர்கள் நிதியமைச்சர்களா பதவிக்கு வரவில்லை எனவும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தைக் கட்டி யெழுப்ப வேண்டுமாயின், பொருளாதாரம் குறித்து அறிந்தவர்களை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.