எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் குறையை கேட்டறியும்’மனிதாபிமான சுற்றுலா’வின் மூன்றாம் நாள் விஜயத்தை இன்று(28) லுனுகம்வெஹரவில் ஆரம்பித்து நகர மக்கள் மற்றும் வியாபாரிகளைச் சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்ததுடன்
“குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு” என்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கி வைத்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர்
“அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் நம்பர் வன் குற்றவாளிக்கும், உற்ற நண்பர்களுக்கும், நம்பர் வன் மோசடி செய்பவர்களுக்கும் எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக சுகபோகங்களை அனுபவித்தனர் அரசாங்கத்தில் உள்ள சிலர் மேலும் தியாகங்களைச் செய்யுமாறு மக்களை வற்புறுத்துகின்றனர் ஒரு வேளை சாப்பிடக் கூட முடியாத அளவுக்கு ஆதரவற்ற நிலையில் உள்ள மக்களை மேலும் தியாகம் செய்யுமாறு கேட்பது போன்ற ஒரு நகைச்சுவை வேறு இல்லை .
அரசாங்கத்தின் ஒரு குழு மக்களை “கொஞ்சம் சாப்பிடுங்கள்” என்றும், “ஒரு வேளை உணவை குறைத்து சாப்பிடுங்கள்”என்றும் சிலர் கூறுகின்றனர்
இன்னும் கொஞ்ச நாளில் “சாப்பிடவே வேண்டாம்” என்று சொல்லிவிடுவார்கள் மக்கள் தியாகம் செய்யும் போது அரசாங்கம் சுக போக பிழைப்பு நடத்தி வந்ததாகவும்,இந்த அரசாங்கம் கொடூரமான அரசாங்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.