ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் தவறான கருத்தைக் கொண்டுள்ளமையினால் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களை, பதவிகளில் இருந்து நீக்குவதில் தனக்கு எவ்வித அவசியமும் இல்லையென ஜனாதிபதி கூறியுள்ளார்.
கூட்டுப் பொறுப்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பதிலாக அதிலிருந்து விலகி அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துவதே சிறந்ததென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.