புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்துக்கும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (28) இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல்களின் மூலம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.
பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள புகையிரத நிலைய அதிபர்கள் இன்று (28) முதல் எரிபொருள், சீமெந்து மற்றும் கோதுமை மாவை எடுத்துச் செல்லும் போக்குவரத்து பணிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
எவ்வாறாயினும், புகையிரத நிலைய அதிபர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் அவர்களது தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வேறு எந்த தொழிலுக்கும் பாதகமான கோரிக்கைகள் இல்லை என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.