தென்கிழக்குப் பல்கலைகழகத்தினால் இன்று கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப் பதக்கங்களை பெற்று, சாதனை படைத்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த மருத்துவபீட மாணவி தணிகாசலம் தர்ஷிகா கௌரவிக்கப்பட்டார்.
பல்கலைக்கழக உபவேந்தரின் அழைப்பின் பேரில் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்த மாணவி தர்ஷிகாவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.
இதன்போது தர்ஷிக்காவுக்கான நினைவுச் சின்னமொன்றை உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் வழங்கி வைத்தார்.