இரண்டு மாடிக் கட்டட வீடொன்றில் இயங்கிவந்த ஃபைபர் வாகன உதிரிபாக உற்பத்தி நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து பிலியந்தலை, தொலே மயானப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தினால் கட்டடம் முழுவதும் தீக்கிரையாகியுள்ளதகவும், பெரும்பாலான வாகன பைபர் பாகங்கள் மற்றும் பல தளபாடங்கள் எரிந்துள்ளதாகாவும் குறித்த பிரதேசத்திற்குப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் ஒரு மணித்தியாலத்திற்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சம்பவத்தினால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.