கொழும்பு செட்டியார் தெரு புதிய கதிரேசன் ஆலயத்தின் அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை குழுவின் மகா மண்டலபூஜை நேற்று (26 ) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
காலை 5 மணி அளவில் கணபதி ஹோம யாகம் இடம்பெற்றது அதனை தொடர்ந்து ஐயனுக்கு அபிஷேகம் மிக சிறப்பாக இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை குழுவின் குரு சுவாமி ஆர் ராஜேந்திரன் குரு சுவாமிகள் தலைமையில் மண்டல பூஜை மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு அலங்காரம் அன்னதானம் ஆனந்த மிகுபஜனை என்பன சிறப்பாக இடம்பெற்றது .