Date:

கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி

இன்று காலை 9.45 மணியளவில் நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சென்ற முச்சக்கரவண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ,அதில் பயணித்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அறியப்படுகிறது.

இந்த விபத்தில் 70 வயதுடைய டீ.எம்.ருபானந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி:  நசார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான…

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம்...

Breakingஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: இலங்கையர் நால்வர் காயம்

இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை வீடியோ எடுக்க...