வெளியிடங்களில் இருந்து சென்ற வர்த்தகர்களுக்கு, பசறை பிரதேச சபை மண்டபத்தில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பசறை பகுதியில் உள்ள வர்த்தக சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டதோடு, முற்பகல் 10.30 வரையில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தது.
பண்டிகைக் காலங்களில், மலிவு விலையில் ஆடைகளை விற்பனை செய்வதற்காக வெளியிடங்களில் இருந்து வரும் வர்த்தகர்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்படுவதினால்,அவர்களது வர்த்தக நடவடிக்கை பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நன்மை அடையும் நோக்கத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டதாக பசறை பிரதேச சபை தலைவர் ஆர்.எம்.ஞானதிலக்க குறிப்பிட்டுள்ளார்.