நான் ஆட்சிப்பீடமேறினால் நாட்டு மக்கள் பசியில் வாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் எனவும், அவர்களை வர்த்தக நிலையங்களில் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்கச் செய்யமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டுவரும் வைத்தியசாலைகளுக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை வழங்கிவைக்கும் செயற்றிட்டத்தின்கீழ் லுனாவ வைத்தியசாலைக்கு நேற்று உபகரணங்களை வழங்கிவைத்த சஜித் பிரேமதாச, அதனைத் தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.