Date:

கண்டியில் சில பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றம்

1,000 புதிய தேசிய பாடசாலைகளை நிறுவும் திட்டத்தின் கீழ் கண்டியில் உள்ள கங்கவட்ட  பிரதேசத்தில் உள்ள 12 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்ற கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கட்டுகஸ்தொட சென் அந்தோனியார், விஹாரமஹா தேவி, ஹேமமாலி, சீதா தேவி, ஸ்வர்ணமாலி மகளிர் வித்யாலயம் மற்றும் வாரியபொல ஸ்ரீ சுமங்கல, சென்ட் சில்வெஸ்டர்ஸ், வித்யார்த்தா , பெராதெனிய மத்திய கல்லூரி, லும்பினி ரோயல் கல்லூரி, பெரவேட்ஸ், சரசவி உயன ஆகியவை தேசிய பாடசாலைகளுக்குள் உள்ளடங்க உள்ளன.

மத்திய மாகாணத்தில் தேசிய பாடசாலைகளாக மாற்றப்படவுள்ள புதிய பாடசாலைகள் பற்றி விவாதிக்க சமீபத்தில் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மாணவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதில் பிரபலமான பாடசாலைக்கு அதிக அளவில் போட்டி நிலவுவதால் பெற்றோர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர், இந்த சிக்கலை தீர்க்க ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் 1000 புதிய தேசிய பாடசாலைகளை நிறுவ கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த புதிய பாடசாலை தற்போதுள்ள தேசிய பாடசாலைகளுக்கு சமனானவை போலவே மேற்கொள்ளப்படும் என்றும், அந்த பாடசாலைகளிள் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கண்டி நிருபர் – கொகுலன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டி20 உலகக் கிண்ணத்தால் களைகட்டும் கொழும்பு: சுற்றுலாத்துறையில் புதிய சாதனை

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்...

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான...

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக்...