எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் பொது இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டை வைத்திருப்பதனை கட்டாயமாக்குவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு அமைச்சர் இந்த விடயத்தை குறிபா்பிட்டுள்ளார்.
அதற்கமைய இரண்டு தடுப்பூசிகளும் பெற்றுக் கொண்டவர்களுக்கு விசேட செயலி மற்றும் QR CODE வழங்கப்படவுள்ளது.
தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடத்திற்குள் நுழைவதனை தடுக்கும் நடவடிக்கையை அதன் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி போடாமல் இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை, என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.