சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலங்கையின் இளம் பாடகி யோஹனித சில்வாவுக்கு கொழும்பில் பத்து பேர்ச் காணி ஒன்றை வழங்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இன்று (20) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தலைமுறையின் பாடகியாக இலங்கையின் பாடலை சர்வதேச அளவில் கொண்டு சென்றதன் மூலம் அவருக்கு கிடைத்துள்ள ரசிகர்களின் பாராட்டை கருத்திற்கொண்டு அவருக்கு இந்த காணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் உள்ள இந்தக் காணியை கையளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.